உத்தரபிரதேசத்தில் மாஞ்சா நூலால் உயிரிழந்த 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் (Shahjahanpur) உள்ள சீதாபூர் (Sitapur) நெடுஞ்சாலையில் சீன மாஞ்சா நூலால் தொண்டை அறுக்கப்பட்டு 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ரவிகுமார் சர்மா, முகமதியில் உள்ள அவரது வீட்டிற்கு தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்திற்கு பிறகு ரவிகுமார் சர்மா அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம், அஜிஸ்கஞ்ச் (Ajisganj) அருகே மாஞ்சா நூலால் கழுத்தில் ஆழமான கீறல் ஏற்பட்டு ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.
மாஞ்சா நூல் என்பது பட்டம் விடுவதற்காக கண்ணாடி துகள்களை கலந்து செய்யப்படும் நூல் ஆகும். இது வானில் பறக்கும் எதிராளியின் பட்டத்தின் நூலை அறுக்க உதவுகிறது.