துருக்கியில் நேற்றும் 25 மாகாணங்கள் சுற்றிவளைப்பு – பலர் கைது!
துருக்கிய அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய அரசு உறுப்பினர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய நேற்றைய தினம் 25 மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைளில் ஏறக்குறைய 125 பேரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுவதும் ஐ.எஸ் அமைப்பினர் குறித்த கரிசனை அதிகரித்துள்ளது.
இஸ்லாமிய சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல்களை முன்னெடுக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே மேற்படி தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை துருக்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஐ.எஸ் அமைப்பினர் கொடிய தாக்குதல்களை முன்னெடுத்திருந்தனர்.





