காங்கேசன்துறை கடற்பகுதியில் 25 மீனவர்கள் கைது : படகுகள் பறிமுதல்!
கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 02 மீன்பிடி படகுகள் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைக்காக அந்தக் குழு காங்கேசன்துறை மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.




