காசா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனைக்கு எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் நிறுத்தப்பட்டதால் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் மூன்று சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் ஹமாஸ் மையம் இயங்கி வருவதாக சமீபத்தில் வெளியான தகவல் காரணமாக இஸ்ரேலிய படைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து, தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.