இலங்கை: சிறி தலதா வந்தனத்திற்காக 24 மணி நேர சுகாதாரக் குழு கடமையில்

“சிறி தலதா வந்தன” நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக 24 மணிநேர சுகாதார கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் உடல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதன்படி, தேவைப்படும்போது, இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும்.
இம்முயற்சிக்கு ஆதரவாக உள்ளூர் சுகாதார ஊழியர்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
(Visited 4 times, 4 visits today)