தெலுங்கானாவில் வரதட்சணை கேட்டு 22 வயது பெண் அடித்துக் கொலை
தெலுங்கானாவின்(Telangana) விகாராபாத்(Viharabad) மாவட்டத்தில் ஒரு தகராறில் கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 22 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுஷா(Anusha) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண், எட்டு மாதங்களுக்கு முன்பு தனது காதலரான 28 வயது பரமேஷ் குமாரை(Paramesh Kumar) திருமணம் செய்து கொண்டார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, தம்பதியினர் இடையே அடிக்கடி வரதட்சணை காரணமாக சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் பரமேஷ் குமார் அனுஷாவை இரண்டு முறை அறைந்து, வயிற்றில் உதைத்து, பின்னர் ஒரு மரக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளார்
பின்னர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அனுஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அனுஷாவின் சகோதரர் புகார் அளித்து, குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது தாயார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.





