கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி
தென்மேற்கு கென்யாவில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 21 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேற்கு நகரமான ககாமேகாவிலிருந்து கிசுமு நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.
கிசுமு அமைந்துள்ள நியான்சா மாகாணத்தின் பிராந்திய போக்குவரத்து அமலாக்க அதிகாரி பீட்டர் மைனா, பேருந்து அதிவேகமாக வந்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
“இறந்த 21 பேரில் 10 பெண்கள், 10 வயது சிறுமி மற்றும் 10 ஆண்கள் அடங்குவர்”.
இந்த சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர், அவர்களில் எட்டு மாத குழந்தையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.





