2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான முழுமையான தகவல்!
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் திகதிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26ம் திகதி தபால் ஓட்டுகள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, இராணுவத்தினர் மற்றும் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகள் கூடுதல் திகதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.