இலங்கை

வவுனியா- செட்டிக்குளம் பகுதியில் தம்பதியினர் வெட்டிக்கொலை!

  • November 30, 2023
  • 0 Comments

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபார நிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில், அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவந்தனர்.இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபார நிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த தம்பதிகள் வியாபார நிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.இந்நிலையில் இன்று காலை வியாபார […]

இலங்கை

இலங்கையில் 3000 ரூபாய்க்கும் அதிக விலை போன தேசிக்காய்!

  • November 30, 2023
  • 0 Comments

இலங்கை சந்தையில் ஒரு கிலோகிராம் தேசிக்காய் 3000 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டின் பல பகுதிகளில், தற்போது தேசிக்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சில பகுதிகளில் 100 கிராம் தேசிக்காய் 100 மற்றும் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தை தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, தேசிக்காயின் விலை அதிகரித்துள்ள நிலையில், வல்லாரைக் கீரையின் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறிந்திருக்க வேண்டியவை

நகரத் தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை! காத்திருக்கும் ஆபத்து

  • November 30, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வேகமாக நகரத் தொடங்கியுள்ளது. இதனால் உலக சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் மிகப்பெரிய பனிப்பகுதி அண்டார்டிகா என்று அழைக்கப்படுகிறது. இதை தனி கண்டமாக உலக நாடுகள் அடையாளப்படுத்துகின்றன. பூமியில் அதிக குளிரான பகுதியும் இதுவே. அண்டார்டிகாவில் பல்வேறு பனிப்பாறைகள், பனிப்பாறையில் உண்டான கடற்கரைகள் அமைந்திருக்கின்றன. இந்த நிலையில், அண்டார்டிகாவின் கடற்கரை ஓரப்பகுதி ஒன்று 1986ம் ஆண்டு பிரிந்தது. அது தனி தீவை போல காட்சியளிக்கத் தொடங்கியது. […]

பொழுதுபோக்கு

நயன்தாராவுக்கு விக்கி கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்… வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

  • November 30, 2023
  • 0 Comments

நடிகை நயன்தாரா, தன்னுடைய பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பதை முதல் முறையாக ரிவீல் செய்துள்ளார். நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் நவம்பர் 18-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், கணவர் விக்னேஷ் சிவன் தனக்கு காஸ்டலி கார் ஒன்றை பரிசாக அளித்ததாக தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். மெர்சிடிஸ் மேபேக் நிறுவனத்தின், இந்த கார் சுமார் 2.69 கோடி முதல் 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. விக்கி […]

இலங்கை

இலங்கையில் விபத்துக்குள்ளான பேருந்து – 30 பேர் காயம்

  • November 30, 2023
  • 0 Comments

பொலன்னறுவை – மனம்பிட்டிய – வெலிகந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காயமடைந்தவர்களில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையிலும் ஏனையோர் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் அரிசி ஆலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான […]

பொழுதுபோக்கு

விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? ஹெல்த் அப்டேட் வெளியானது

  • November 30, 2023
  • 0 Comments

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல்நிலை குறித்து முக்கிய தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டதன் காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வகையில் நேற்று காலை மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரமாக விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், […]

செய்தி

எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுக்கும் காசா

  • November 30, 2023
  • 0 Comments

காஸாவிற்கு வரும்படி அமெரிக்கச் செல்வந்தர் எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவரே இந்த அழைப்பை விடுத்துள்ளார். காஸா மக்களுக்கு எதிராக எந்த அளவுக்கு அழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைக் காண மஸ்க்கிற்கு அழைப்பு விடுப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்டான் கூறினார். நேற்று முன்தினம் (ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கிய இடத்திற்கு மஸ்க் சென்று பார்வையிட்டார். வெறுப்புணர்வு பரவுவதைத் தடுக்கத் தேவையான அனைத்தையும் செய்யப்போவதாக அவர் தெரிவித்தார். ஒக்டோபர் 7ஆம் […]

வாழ்வியல்

வாய்வு தொல்லைகளால் அவதிப்படுறீங்களா? உங்களுக்கான பதிவு

  • November 30, 2023
  • 0 Comments

நம் உடம்பில் உள்ள உணவுகளை வாயுக்கள் தான் மற்ற உறுப்புகளுக்கு தள்ளும் பணியை செய்கிறது. அதுவே அழகுக்கு மீறினால் நஞ்சாகிறது. “வாய்வு இல்லாமல் வாதம் வராது ” வாய்வை அலட்சியப்படுத்துவது மிகவும் தவறு. அதனால் பல்வேறு விளைவுகளை நாம் சந்திப்போம். அதாவது மூட்டு வலி, வாதம்,வயிற்றுப்புண்போன்றவை ஏற்படும். உடலில் செரிமானம் நடக்கவில்லை என்றால் போதிய அளவு சத்து நமக்கு கிடைக்காது. கண்டறிவது எப்படி: சாப்பிட்ட உடன் தொடர் ஏப்பம், அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வருவது, பசியின்மை மலச்சிக்கல் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் – காஸா மக்கள் விடுக்கும் கோரிக்கை

  • November 30, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தற்காலிய போர் நிறுத்தம் ஓரளவுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக காஸா பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்படும் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். தாங்கள் ஆசைப்படும் போருக்கு முந்தைய வாழ்க்கையை வாழ நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும், அதற்கு சர்வதேச நாடுகள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒக்டோபர் 7ஆம் திகதி காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வட்டி விகிதங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

  • November 30, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கணிசமான காலத்திற்கு வட்டி விகிதங்களில் உயர்வு இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த வருடத்தின் 03வது காலாண்டு வரை தற்போதைய பண வீதம் 4.35 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பணவீக்கம் கடந்த மாதம் 4.9 வீதமாக வீழ்ச்சியடைந்ததன் அடிப்படையில் OECD வெளியிட்டுள்ள இந்த முன்னறிவிப்பு. மில்லியன் கணக்கான வீட்டுக் கடன் மற்றும் அடமானக் கடன் வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்று கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் பண […]