2023 ஆசியக் கிண்ணம் இந்தியா வசமானது ; 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்திய அணி 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.2 சகல விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
50 ஓவர்களில் 51 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி விக்கெட் இழப்பின்றி 6.1 ஓவர்களில் 51 ஓட்டங்களை பெற்று 8 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைபற்றியமை குறிப்பிடத்தக்கது.
(Visited 22 times, 1 visits today)