தென்கொரியாவில் இருந்து தத்துகொடுக்கப்பட்ட 200000 குழந்தைகள் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
தென்கொரியாவில் இருந்து ஏறக்குறைய 200000 குழந்தைகள் சட்டவிரோதமான வழிகளில் தத்துகொடுக்கப்பட்டுள்ளதாக புதிய ஆதாரங்கள் காட்டுகின்றன.
குறித்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகியுள்ள நிலையில், தங்களின் உண்மை நிலையை கண்டறிய பல்வேறு வழிகளை தேடி வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் கதைகள் தற்போது புதிய கணக்கீட்டை மேற்கொள்வதற்கான அவசியத்தை கொண்டுவந்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள 80க்கும் மேற்பட்ட தத்தெடுப்பாளர்களுடன், பெற்றோர்கள், ஏஜென்சி ஊழியர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளையும் வைத்து ஒரு நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பெறுபேறுகள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பல குழந்தைகள் தெருக்களில் இருந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டதாக அல்லது மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
உண்மை என்னவென்றால் சில ஆவணங்கள் புனையப்பட்டிருப்பது இதனூடாக தெரியவந்துள்ளது. நேர்காணலின் நிறைவில் சில குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்துள்ளனர்.
இதற்கிடையில் அரசாங்க அதிகாரிகள் அதன் கடந்த காலத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் உண்மைக்கான நிதியும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.