செய்தி விளையாட்டு

அமெரிக்கா புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள அனைத்து அணிகளும் தங்களது அணி விவரங்களை அறிவித்துவிட்டன.

ஜூன் 2ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா-கனடா அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5ந்தேதி எதிர் கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9ந்தேதியும் அமெரிக்காவுடன் 12ந்தேதியும் கனடாவுடன் 15ந்தேதியும் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டிகள் நடக்கிறது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறது.

இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள். ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

மாற்று வீரர்களாக சுப்மன்கில், ரிங்குசிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 18 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி