ஆந்திராவில் 20 வயது பொறியியல் மாணவர் தற்கொலை
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம்(Srikakulam) மாவட்டத்தில் உள்ள எட்செர்லாவில்(Etcherla) உள்ளூர் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பி.ஸ்ருஜன் என அடையாளம் காணப்பட்ட இளைஞன் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீகாகுளம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.வி. மகேஸ்வர ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட தகவல்களின்படி, திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் கொண்ட ஸ்ருஜன் அதிக மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், இந்த மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கே.வி. மகேஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 3 visits today)




