அஜர்பைஜானில் எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு
அஜர்பைஜானின் நாகோர்னோ-கரபாக் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜர்பைஜானின் இந்த சர்ச்சைக்குரிய பகுதியில் சுமார் 120,000 ஆர்மீனியர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பு நடந்த இடத்தில் அடையாளம் தெரியாத 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் 7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அந்நாட்டின் உள்ளூர் அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
நாகோர்னோ-கராபாக் ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாகும், இது அஜர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.