புத்தளத்தில் ஆசிரியரை தாக்கிய 17 மாணவர்கள் கைது!
																																		புத்தளத்தில் பாடசாலை ஒன்றில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 25 மாணவர்கள் இணைந்து ஆசிரியரை தாக்கிவிட்டு, அவரது வீட்டையும் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)
                                    
        



                        
                            
