காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலி
இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் பள்ளி மற்றும் காசா நகரில் உள்ள குடியிருப்பு வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
“காசா நகரத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த அல்-தபீன் பள்ளியைத் தாக்கி இஸ்ரேலிய இராணுவம் 10 பாலஸ்தீனியர்களைக் கொன்றது” என்று சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்தார்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பாசல் கூறினார்.
இதற்கிடையில், கிழக்கு காசாவில் அல்-ஜெய்டவுன் பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக பாசல் கூறினார்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
காசாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் இறப்பு எண்ணிக்கை 44,249 ஆக உயர்ந்துள்ளது.