இலங்கை முழுவதும் 14 ஆயிரம் மின்தடை சம்பவங்கள் பதிவு – காஞ்சன விஜேசேகர!

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 14 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (ஜுலை 06) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும், நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் அதிகளவான மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)