சத்தீஸ்கரில் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ள 14,000 சுகாதாரத் துறை ஊழியர்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகாதாரத் துறை ஊழியர்களில் 14 ஆயிரம் பேர் தங்களது பணியை ஒரே நாளில் ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பலர் வேலை நிரந்தரம் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்தக்கோரி ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக, பொது சுகாதார சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 25 ஊழியர்களை அரசு பணி நீக்கம் செய்தது.
இதனால் அதிருப்தி அடைந்த 14000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தேசிய சுகாதார இயக்கம், அனைவருக்கும் சமமான, குறைந்த கட்டணத்தில் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பல்வேறு சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.