மும்பையில் 14 வயது சிறுமி 19வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
மும்பை(Mumbai) அருகே கல்யாணில்(Kalyan) உள்ள ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து 14 வயது சிறுமி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தானே(Thane) மாவட்டத்தின் கல்யாணில் உள்ள ரவுனக் நகர(Raunak Nagar) வளாகத்தில் வசித்து வந்த ரித்தி கரடே(Riddhi Kharade) என்ற சிறுமி பாடசாலையில் சிறந்த மதிப்பெண்கள் பெறாததால் விரக்தியில் பாட்டி வீட்டில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், மும்பையில் பணிபுரியும் அவரது தாயார் வேலைக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், கதக்பாடா(Khadakpada) காவல் நிலையத்தின் மூத்த காவல் அதிகாரி அமர்நாத் வாக்மோட், “கல்வி மன அழுத்தம் சிறுமியை இந்த தீவிர நடவடிக்கையை எடுக்கத் தூண்டியது என்பதை முதற்கட்ட விசாரணையில் தெரிவியவந்தள்ளது” என்று தெரிவித்துள்ளார்.





