இலங்கை

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் பெய்த தொடர் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு குறைந்தது 14 பேர் உயிரிழந்ததுடன் மூவர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு சுலவேசி மாகாணத்தின் டானா டோராஜா மாவட்டத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்பு பணியினர் விரைந்து வந்ததாகவும், 14 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் மோசமான வானிலை மீட்பு பணியை முன்னெடுப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!