ஐரோப்பா

14 வயது சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு!

தெற்கு லண்டனில் 14 வயது சிறுவனை மிகப்பெரிய வாள் கொண்டு குத்திக் கொன்ற டீன் ஏஜ் சிறுவன் மார்க்ஸ் வாக்கருக்கு குறைந்தது 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 18ம் திகதி 2021ஆண்டு தெற்கு லண்டனில் உள்ள வெஸ்ட் க்ராய்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற சண்டைக்கு பிறகு, தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்த 14 வயதுடைய சிறுவன் ஜெர்மைன் கூல்ஸ்-ஐ மிகப்பெரிய நீண்ட வாளால் டீன் ஏஜ் சிறுவன் மார்க்ஸ் வாக்கர் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

மிக நீண்ட வாலால் 7 முறை வரை குத்தப்பட்ட ஜெர்மைன் கூல்ஸ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.பின் அங்கிருந்த பொதுமக்களால் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

massive sword

சிறுவன் ஜெர்மைன் கூல்ஸ் வாளால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து 6:41pm மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அரை மணி நேரங்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாருக்கு கத்தி குத்து குறித்த எத்தகைய சூழலும் கண்டறிய முடியவில்லை.ஆனால் இதையடுத்து 14 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் மருத்துவமனையில் இருந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

https://twitter.com/i/status/1655987348906049538

அதிலிருந்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், தப்பியோடிய டீன் ஏஜ் சிறுவன் மார்க்ஸ் வாக்கரை தேடி வந்தனர், இறுதியில் 6 வார மறைவிற்கு பிறகு அவர் டிசம்பர் 27ம் திகதி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.மேலும் ஜெர்மைன் கூல்ஸ் என்ற சிறுவனை வாள் கொண்டு கொலை செய்த குற்றத்தையும் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று(9) நடைபெற்ற இறுதி விசாரணையில் அவருக்கு குறைந்தது 19 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மார்க்ஸ் வாக்கர், சிறுவன் ஜெர்மைன் கூல்ஸ்-ஐ வாளால் குத்திக் கொன்ற போது 16 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்