செய்தி தமிழ்நாடு

13 சவரன் நகை திருட்டு பெண் கைது

கோவை மாவட்டம் கோட்டூர் காவல் நிலைய பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கோவில் திருவிழாக்களின் போது பழனியத்தாள்(75), சிவபாக்கியம்(65) மற்றும் துளசியம்மாள்(75) ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் தங்க செயின்களை திருடி சென்றார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கெளதமி (36) என்பவர் இக்குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இப்பெண் இதுபோன்ற பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் கௌதமியை கைது செய்து அவரிடமிருந்து திருடிய 13 சவரன் நகையை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி