12,000 பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் சிறைகளில்
12,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் இருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.
இது தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் சமர்ப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் சிறைகளில் அதிகளவானோர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறைகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6,200 பாகிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 1,612 பாகிஸ்தான் குடிமக்கள் அபுதாபியில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரியாத்தில் 1,596 பேரும், ஜெட்டாவில் 1,504 பேரும், துபாயில் 1,488 பேரும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.