சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் 120 விடுதிகள் சோதனை
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் 120 விடுதிகளில் கழிவுநீர் சோதனையிடப்படுகின்றது.
mpox தொற்றுத் தொடர்பில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சு, தேசியச் சுற்றுப்புற அமைப்பு, சுகாதார அமைச்சு ஆகியவை இணைந்து சோதனையை நடத்துவதாகச் சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறினார்.
அவர் நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூரின் தயார்நிலையைப் பற்றி விவரித்தார்.
வேலை அனுமதியில் சிங்கப்பூருக்குப் புதிதாக வருவோருக்கும் சுகாதாரப் பரிசோதனை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரின் பாலர் பாடசாலைகளிலும் ஏனைய பாடசாலைகளிலும் மாணவர்கள் அறிகுறி எதனையும் வெளிப்படுத்துகிறார்களா என்பது சோதிக்கப்படுகிறது.
mpox கிருமித்தொற்று அபாயம் கொண்ட பகுதிகளில் இருந்து விமானம், கடல் வழி சிங்கப்பூருக்கு வருவோருக்கு ஏற்கெனவே உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதியிலிருந்து அது நடப்பில் உள்ளது.