பங்களாதேஷில் 12 கைதிகள் மரணம் – நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷில் குறைந்தது 12 கைதிகள் கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடினர்.
இம்மாதம் 5ஆம் திகதி பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறினார். அதனையடுத்து பல சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடினர்.
பங்களாதேஷில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டப் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் போராடுகிறது. 8 ஆம் திகதி ஜமால்பூர் சிறைச்சாலையில் 6 கைதிகள் கொல்லப்பட்டனர்.
கைதிகள் பாதுகாவலர்களைத் தாக்கியதால் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது.
இதற்கு முன்னர் ஆகஸ்ட் 6ஆம் திகதி இன்னொரு சிறைச்சாலையில் 6 கைதிகள் கொல்லப்பட்டனர்.
(Visited 11 times, 1 visits today)