ஷுப்மன் கில்லுக்கு நேர்ந்த சோகம் – 115 வீதம் அபராதம் விதிப்பு
அவுஸ்திரேலிய அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட்டமிழப்பு தொடர்பாக விமர்சனக் கருத்துக்களை தெரிவித்த இந்திய வீரர் ஷுப்மன் கில்லுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 18 ரன்கள் எடுத்திருந்த போது பிடிகொடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும், முடிவு மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்பட்டது, அங்கு மூன்றாவது நடுவர் ஆட்டமிழந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்த முடிவை விமர்சித்ததற்காக சுப்மன் கில் மீது மொத்த போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இந்த போட்டியில் செலுத்த வேண்டிய ஓவர்கள் எண்ணிக்கையை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசாததால் இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலிய அணிக்கு 80 சதவீதமும் அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, போட்டித் தொகையில் 115 சதவீதத்தை அபராதமாக சுப்மன் கில் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.