சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் மாயமாகியுள்ளனர்

சீனாவில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் குவாங்டாங் பகுதியில் 11 பேர் காணாமல் போயுள்ளனர்.
எனினும், வெள்ளம் காரணமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அப்பகுதியில் 60,000க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பெருமளவிலான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல நிவாரணக் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, வெள்ளத்தில் சிக்கிய மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை இனிவரும் நாட்களில் தொடரும் என சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)