பிரேசில் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் – 11 பேர் பலி

பிரேசிலின் மத்திய-மேற்கு மாநிலமான மாடோ க்ரோசோவில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 45 பேர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 12 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், 26 பேர் மிதமான நிலையில் உள்ளனர், எட்டு பேருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசில் தலைநகர் குயாபாவிலிருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூகாஸ் டோ ரியோ வெர்டே நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குயாபாவிலிருந்து பிரேசிலின் வேளாண் வணிகத் துறையின் முக்கிய மையமான சினோப்பிற்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.