கனடாவில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்

கனடாவின் டொராண்டோவில் உள்ள ஒரு இரவு விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்தனர்.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பலரின் காயங்கள் மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொராண்டோவின் ஸ்கார்பரோ மாவட்டத்தில் உள்ள ஒரு பப்பில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பப் ப்ரோக்ரஸ் அவென்யூ மற்றும் கார்ப்பரேட் டிரைவ் அருகே அமைந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டது.
துப்பாக்கிதாரியை பிடிக்க பொலிசார் பாரிய தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)