காசா பகுதியில் 100,000 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன
இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக காசா பகுதியில் ஏற்பட்ட சேதம் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளின்படி, காசா பகுதியில் மட்டும் அழிக்கப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 100,000 ஐ நெருங்குகிறது.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள், காசா பகுதியின் வடக்குப் பகுதியில்தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தென் பகுதியில் உள்ள 15 சதவீத கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலும் காசாவுக்கு பதிலடி கொடுத்தது.
கட்டிடங்கள் இருந்த பகுதிகள் இப்போது எப்படி வெறும் இடிபாடுகளாக உள்ளன என்பதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
அழிக்கப்பட்ட கட்டிடங்களில் தேவாலயங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் அடங்கும். சமீபத்திய புகைப்படங்களில் அகதிகள் முகாம்கள், குடிசைகள் மற்றும் உணவகங்களும் ஓரளவு சேதமடைந்துள்ளன.