மேற்கு வங்காளத்தில் சாலை விபத்தில் 10 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

மேற்கு வங்காளத்தின் பர்த்வான் நகரில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் பீகாரைச் சேர்ந்த 10 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர், மேலும் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து, இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரியைச் சேர்ந்த யாத்ரீகர்கள், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கங்காசாகரைப் பார்வையிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பூர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள பாகுய்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 19ல் விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் எட்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். ஆறு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் பர்த்வான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.