சீனாவில் உடல் எடை குறைத்தால் 1 மில்லியன் யுவான் – நிறுவனம் வெளியிட்ட அறிவிபபு

சீனாவில் ஊழியர்கள் உடல் எடை குறைப்பதை ஊக்குவிக்க வித்தியாசமான முயற்சியை நிறுவனம் ஒன்று கையாண்டுள்ளது.
சீனாவின் ஷென்ஸன் நகரில் உள்ள நிறுவனம் ஒன்று கடந்த மாதம் 12ஆம் திகதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது.
உடல் எடையைக் குறைக்கும் ஊழியர்களுக்கு 1 மில்லியன் யுவான் வரை சன்மானம் வழங்கவிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
ஊழியர்கள் குறைக்கும் ஒவ்வோர் அரை கிலோகிராமுக்கும் 500 யுவான் பெறுவர் எனக் கூறப்பட்டது.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊழியர்கள் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்க நிறுவனம் 2022ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அந்தச் சவாலை நடத்தி வருகின்றது.
இம்முறை 3 மாதகாலத்தில் 20 கிலோகிராம் உடல் எடையைக் குறைத்த ஊழியர் ஒருவர் 20,000 யுவான் ரொக்கம் பெற்றுச் சவாலின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதுவரை சவாலில் பங்குபெற்ற 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோகிராம் உடல் எடையைக் குறைத்துள்ளனர்.