டெல் அவிவ் அருகே வெடித்த 03 பேருந்துகள் : சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்!

டெல் அவிவ் அருகே மூன்று பேருந்துகள் வெடித்துள்ளன, இது ஒரு “பயங்கரவாத சம்பவம்” என்று இஸ்ரேலிய போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல் அவிவ் நகருக்கு தெற்கே உள்ள பாட் யாம் நகரில் இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாகவும், மூன்றாவது குண்டு அருகிலுள்ள ஹோலோன் நகரத்தில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹோலோனில் குறைந்தது ஒரு வெடிக்காத சாதனத்தைக் கண்டுபிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கட்டத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்றும், ஷின் பெட் உள் பாதுகாப்பு நிறுவனம் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் முன்னதாக தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)