ஸ்கொட்லாந்தில் அறிமுகமாகும் உலகின் முதல் சாரதி இல்லா பேருந்து
ஸ்கொட்லாந்தில் உலகின் முதல் சாரதி இல்லா பேருந்து அறிமுகமாகவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் சாரதி இல்லா வாகனங்கள் கவனம் பெற்று வருகிறது.
அந்த வகையில் சாரதி இல்லா கார்கள் சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.
இப்போது முதல் முறையாக ஸ்கொட்லாந்தில் சாரதி இல்லாத பேருந்து அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
33 பேர் பயணம் செய்யும் வகையிலான பேருந்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், எடின்பர்க் மற்றும் பைஃப் இடையே 14 மைல் தொலைவுக்கு சேவை தொடங்கவிருக்கிறது.
இந்த பேருந்தில் தொழில்நுட்ப செயல்பாட்டை கண்காணிக்கவும், பயணிகள் ஏற, இறங்க உதவி செய்யவும் இரு பணியாளர்கள் அதில் இருப்பார்கள் என அந்நாட்டு போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி இல்லா பேருந்து சேவையால், மனித தவறால் நேரிடும் 90 சதவீத விபத்துக்கள் தடுக்கப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.