வீட்டுக்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு.,உயிர் தப்பிய சிறுமி – பிரான்ஸில் அரங்கேறிய சம்பவம்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியில் எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் சிறுமி ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
La Courneuve என்ற உள்ள வீடொன்றுக்குள் திடீரென பாய்ந்த துப்பாக்கி ரவையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிஷ்ட்டவசமாக சிறுமி ஒருவர் காயமின்றி உயிர்பிழைத்துள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்குள்ள வீடொன்றின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டுக்குள் பாய்ந்துள்ளது.
அங்கு வசிக்கும் சிறுமி ஒருவரது கட்டிலில் சென்று குறித்த ரவை துளைத்துக்கொண்டு நின்றது. கட்டிலை துளைத்து நின்ற 7.62 mm கலிபர் வகை ரவை கைப்பற்றப்பட்டதுடன், ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





