செய்தி தமிழ்நாடு

வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழப்பு

நடிகர் சத்தியராஜின் சகோதரிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழப்பு.

கோவை நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டின் நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழந்துள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் நாயக்கன்பாளையத்தில் அபராஜிதா(சத்தியராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு தோட்டத்து வீடும்(farmhouse) உள்ளது.  இங்கு எப்போதாவது தான் அவர்கள் வந்து செல்வார்கள் என தெரிகிறது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டமும் தென்படும்.

இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனையடுத்து அங்கு பணிபுரிவோர் சென்று பார்க்கையில், தோட்டத்து வீட்டின் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குட்டியானை விழுந்து உயிரிழந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குட்டியானைக்கு 1 வயது இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவி இடத்திற்கு கோவை மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வன பாதுகாவலர் ஆகியோர் விரைந்துள்ளனர்.

ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நாளை உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அங்கு வந்த யானைக்கூட்டத்தின் வீடியோ கிடைக்கப்பெற்றுள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி