வாகன கொள்வனவில் கடும் வீழ்ச்சி – விலையை குறைக்குமாறு பரிந்துரை!
பொது மக்கள் பயன்படுத்தும் சிறிய வாகனங்களின் விலைகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானகே வலியுறுத்தியுள்ளார்.
குறைந்த எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களின் விலையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக பொதுமக்கள் வாங்கக்கூடிய Alto, Wagon R, Yaris, Hustler போன்ற வாகனங்கள் மற்றும் 1000 சிசி வகை வாகனங்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து வரும் பேரழிவு காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான நிபந்தனைகளை தளர்த்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.





