வட இந்தியாவில் பாரிய நிலநடுக்கம்
புது தில்லி, பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துர்க்மெனிஸ்தான், இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் கலாஃப்கானில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
ராவல்பிண்டியில் உள்ள AFP நிருபர் ஒருவர், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து குரானை ஓதிக் கொண்டிருந்தனர் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பிற நகரங்களில் இருந்தும் இதே போன்ற தகவல்கள் கிடைத்தன.
(Visited 2 times, 1 visits today)