லண்டனில் ஓட்டப் போட்டிக் சென்றவர் திடீர் மரணம்

லண்டனில் இடம்பெற்ற London Marathon எனும் நெடுந்தொலைவு ஓட்டத்துக்குப் பிறகு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார்.
45 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பந்தய ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டீவ் ஷாங்க்ஸ் (Steve Shanks) என்ற அந்த நபர் சுமார் 42 கிலோமீட்டர் ஓட்டப்பாதையை 2 மணி நேரம், 53 நிமிடம், 26 வினாடிகளில் ஓடிமுடித்தார்.
அவர் ஓர் அனுபவம்வாய்ந்த நெடுந்தொலைவு ஓட்டப்பந்தய வீரர் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அவரது மரணத்துக்குக் காரணம் என்னவென்று மருத்துவப் பரிசோதனை மூலம் ஆராயப்படும் என்று குறிப்பிடப்பட்டது.
(Visited 10 times, 1 visits today)