ரஷ்ய அதிகாரிகள் ஆப்பில் ஐபோன்களை பயன்படுத்த தடை?
ரஷ்ய அதிகாரிகள் ஆப்பில் ஐபோன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி நிர்வாகத்தின் முதல் துணைத் தலைவர் செர்ஜி கிரியென்கோ, மேற்கத்தேய புலனாய்வு அமைப்புகளால் தொலைப்பேசிகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். ஸ
தடை உத்தரவின் படி இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களுக்கு ஆப்பிள் பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





