ரஷ்யாவால் கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
கெர்சன் மற்றும் கார்கிவ் பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்ட குழந்தைகள் மீண்டும் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் குழந்தைகள் குறைத்தீர்க்கும் அதிகாரி மைகோலா குலேபா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியான மீட்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் ஆரம்பத்தில் இருந்து ரஷ்யா ஆயிரக்கணக்கான குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்காக புட்டின் மீது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் அண்மையில் குழந்தைகளை மீட்பதற்காக புதிய செயலியொன்றையும் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Сhildren abducted by Russians from the Kherson and Kharkiv regions have been reunited with their families after several months of separation. They are now safe but in need of psychological and physical recovery.
Follow the updates. pic.twitter.com/03zmQGvyZP
— Mykola Kuleba (@MykolaKuleba) April 7, 2023