இலங்கை செய்தி

ரயிஸ் குக்கரால் சிறுமிக்கு விபரீதம் ;தந்தையை கைது செய்த பொலிஸார்!

செயற்பட்டுக் கொண்டிருந்த ரைஸ் குக்கர் மூடியை 16 வயது மகளின் முகத்தில் வைத்து தந்தை எரித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிங்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பிங்வத்த வடுபாசல்வத்த பிரதேசத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி தன் தாயாருடன் வந்து  செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.முகத்தில் எரி காயத்துடன் வந்த பாதிக்கப்பட்ட சிறுமியும் தாயும் நேற்று (05) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ தினத்தன்று இரவு 7.45 மணியளவில்  சிறுமி சோறு சமைத்துக் கொண்டிருக்கும் போது சிறுமியின் தாய் சந்தைக்குச் சென்றுள்ளார்.  அவ் வேளையில் சந்தேக நபரான சிறுமியின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது ரயிஸ் குக்கரை திறந்து பார்த்த சந்தேக நபர் இவ்வளவு அரிசி எதற்காக சமைக்கின்றாய் எனக் கேட்டு ஆத்திரமடைந்து, ரயிஸ் குக்கர் மூடியை எடுத்து தன் முகத்தில் வைத்து அழுத்தியதாக சிறுமி தெரியப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்துடன் சேர்த்து கன்னத்திலும் எரிகாயங்கள் இருந்ததால் சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.சந்தேக நபரை கைது செய்ய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் பத்மா நந்தன தெரிவித்தார்.

 

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை