யேமன் படகு விபத்தில் 15 பேர் பலி : உடல்களை தேடும் மீட்புக் குழுவினர்!

யேமன் படகு விபத்தில் 15 பேர் பலி : உடல்களை தேடும் மீட்புக் குழுவினர்!
யேமன் செங்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 14 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யேமனின் {ஹதைதா மாகாணத்தில் இந்த படகு விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மீன் வளத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
குறித்த ஹுதைதா மாகாணம் அந்த நாட்டின் ஹுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கமரான் தீவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது கடுமையான காற்று மற்றும் அலைகள் காரணமாகக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உயரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரபு நாடுகளில் அடைக்கலம் தேடி வரும் ஆப்பிரிக்கர்கள் யேமன் கடல்பகுதியை சட்டவிரோதமாகக் கடக்கும்போது இத்தகைய படகு விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன
(Visited 11 times, 1 visits today)