யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் திடீரென உயிரிழப்பு
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.
கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
(Visited 16 times, 1 visits today)





