இலங்கை

யானையை பெற்று கொண்டு இலங்கைக்கு உலகின் மிக ஆபத்தான பறவைகளை வழங்கிய தாய்லாந்து

உலகின் மிக ஆபத்தான பறவைகளை இலங்கைக்கு தாய்லாந்து வழங்கியுள்ளது.

தாய்லாந்தினால் 3 “இரட்டை வாட்டில்ட் கெசோவரி” – Double Wattled Cassowary பறவைகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆண் பறவைகளும், ஒரு பெண் பறவையும் உள்ளடங்குகின்றன.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த பறவைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

மலேஷியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச் 179 ரக விமானத்தில் இந்த 3 இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகளும் நேற்றிரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

5 அடி உயரமும் 60 கிலோ கிராம் எடையும் கொண்டதாக வளரக்கூடிய இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகள் உலகின் மிக ஆபத்தான பறவை இனத்தில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன.

கண்கவரும் வர்ணங்களுடன் மிக அழகாக காட்சியளிக்கும் இந்த பறவைகளால் உயர பறக்க முடியாது.

இலங்கை – தாய்லாந்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் குரங்குகள், தீக்கோழி, பாம்புகள் உள்ளிட்டவை தாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்