செய்தி தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இருதயம்,பல்,கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சி.வி.என்.அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, லைஃப் கேர் மருத்துவமனை,

இந்திய பல் மருத்துவச் சங்கம்,குமார் கண் சிகிச்சை மையம் ஆகியவை இணைந்த நடத்தும் மாபெரும் இருதய,பல்,கண் பரிசோதனை முகாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை மேலாண்மை செயலாளரும்,காஞ்சிபுரம் எம்.எல்.

ஏவுமான சி.வி.எம்.பி.எழிலரசன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.இம்முகாமினை திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொது மக்கள் பங்கேற்று கண் பரிசோதனை,இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை,ஈசிஜி,எக்மோ கார்டியோகிராம்,

எலும்பு மூட்டு மருத்துவ பரிசோதனை,பல் மருத்துவ பரிசோதனை

உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்தும்,இருதய நோய் நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவர்களிடம் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளையும்  பெற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலசுமி யுவராஜ்,துணை மேயர் குமரகுருநாதன்,மாநகர செயலாளர்,பகுதி கழக செயலாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

 

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!