செய்தி வட அமெரிக்கா

மிசிசிப்பி-யை தாக்கிய சூறாவளி;14 பேர் பலி, தேடுதல் பணி தீவிரம்! (வீடியோ)

அமெரிக்காவின் மிசிசிப்பியை சூறாவளி தாக்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி முழுவதும் அழிவுகரமான சூறாவளி மற்றும் வலுவான இடியுடன் கூடிய மழை தாக்கியது. இதில் 100 மைல்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருப்பதாக உள்ளூர் மற்றும் மத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த பயங்கரமான சூறாவளியால் மாநிலம் முழுவதும் குறைந்தது 14 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாக கவர்னர் டேட் ரீவ்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

சில்வர் சிட்டி மற்றும் ரோலிங் ஃபோர்க் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது, மற்றும் இரவு 8:50 மணியளவில் சூறாவளி தாக்கியதாகவும் வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

 

யுனைடெட் கஜூன் கடற்படைத் தலைவர் டோட் டெரெல் ஏபிசி நியூஸ் உடனான தொலைபேசி பேட்டியில், ரோலிங் ஃபோர்க் நகரம் மிகவும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், மிசிசிப்பியைத் தாக்கிய சூறாவளி Tchula வின் வட மேற்குப் பக்கம் மற்றும் நெடுஞ்சாலை 49 வழியாக நகர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!