மாணவ மாணவிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று மாத காலமாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வந்தது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 7:00 மணி முதல் தற்போது வரை தொடர்ந்து இடியுடன் கனமழை பெய்து வருகிறது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் நீர்நிலைகளுக்கு செல்லும் வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக ஆங்காங்கே அலுவலகங்கள் பள்ளிக்கூடங்கள் மார்க்கெட்டுகள் ஆகிய பகுதிகளில் நீர் சென்றது
குறிப்பாக மின்வாரிய அலுவலகத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மின்கட்டணம் செலுத்த வருவோர் மிகவும் அவதிப்பட்டு தேங்கியுள்ள மழை நீரில் தட்டு தடுமாறு நடந்து வந்து தங்களது மின் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்
இதேபோன்று உழவர் சந்தையில் மழைநீர் குலம் போல் தேங்கி நிற்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவசியுற்று வருகின்றனர் காய்கறிகள் தண்ணீரில் மிதக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது
இதேபோன்று சந்தைப்பேட்டை பள்ளி வளாகப்p முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெரிதும் அவதி உற்று உள்ளனர்
புதுக்கோட்டை நிர்வாகம் முறையாக வடிகால்களை தூர்வாராததும் பராமரிக்காதது தான் இரண்டு மணி நேரம் பெய்த மழைக்கே புதுக்கோட்டை நகர் தத்தளித்து கொண்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இனிவரும் காலங்களில் ஆவது நகராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டு வடிகால்கள் முறையாக தூர்வாரவும் பராமரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்