அரசியல் உலகம் செய்தி

போர் முடிவுக்கு வரும் சாத்தியம்: அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் ஏற்பு!

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார்.

20 அம்சங்கள் அடங்கிய அமைதித் திட்டத்தில் 90 சதவீதம் ஏற்கப்பட்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கூறினார்.

அமெரிக்காவின் புளோரிடா Florida மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை அந்நாட்டு நேரப்படி இன்று (29) அதிகாலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது அமைதித் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் ரஸ்ய ஜனாதபதியுடன் ட்ரம்ப் தொலைபேசிமூலம் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தியுள்ளார். விரைவில் புடினும், ட்ரம்பும் மீண்டும் சந்திப்பார்கள் என தெரிகின்றது.

அதேவேளை, உக்ரைன் ஜனாதிபதியுடன் இணைந்து ஐரோப்பிய தலைவர்களை சந்திப்பதற்கும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். நேட்டோ NATO தலைவருடனும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது. எனினும், இன்னும் ஓரிரு விடயங்களில் மாத்திரமே இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

ஐரோப்பிய தலைவர்களுடனான சந்திப்பையடுத்து அமைதி முயற்சி இறுதி பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!