போரில் 1 இலட்சத்து 78 ஆயிரம் வீரர்களை இழந்த ரஷ்ய படையினர்!
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஓர் ஆண்டைக் கடந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் மோதலின் போது ரஷ்யா 1 இலட்சத்து 78 ஆயிரத்து 150 வீரர்கள் இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
படையெடுப்பிலிருந்து ரஷ்யா சந்தித்த இழப்புகளின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய புதுப்பிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, உக்ரேனியப் படைகள் 3,636 டாங்கிகள் மற்றும் 7,024 கவச வாகனங்களை அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷ்யா எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)





